உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
₹100.00
15 வாழ்வியல் நாயகர்களை வரிசைப்படுத்தும் இந்நூலினை இயற்றியுள்ள முனைவர்.பொ.சங்கர் வரலாற்று ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். வாசிப்பதை நேசிப்பவர். ‘இந்த நிலை மாறும்’ என்னும் மந்திரம் போல எந்த நிலையும் மாறும் என்பது வெற்றியாளர்களின் வேத மந்திரம். கடல் சூழ்ந்த , மலைகள் சூழ்ந்த நாட்டில் நீரினை அனைவரும் பெற முடியாத சூழல் இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது. சரியான திட்டமிடலும் தொலைநோக்கும் இல்லாததன் விளைவே இத்தகைய நிலை . இதனை மாற்ற முடியும் என்று மாற்றத்திற்குப் போராடி அதில் வெற்றியும் கண்ட இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் அவர்களின் முயற்சி அனைவருக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது. நதிக்கரை நாகரீகமாக வளர்ந்த மனித இனம் காலப்போக்கில் நதிகளைச் சூழ்ந்து வாழ முற்பட்டனர். இயற்கை சமநிலை மாறிய காரணத்தால் நதிகளையும் இயற்கையும் மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டது. பேசுபொருளாக இருந்த நீர் நிலை மேம்பாடு இராஜேந்திர சிங் என்பவரின் செயலாக மாறியது. இப்படிப்பட்ட ஆளுமைகளை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
Reviews
There are no reviews yet.